தமிழில் 'வேதம்', 'பாளையத்தம்மன்', 'சபாஷ்', 'கண்ணன் வருவான்' ஆகிய பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. தமிழை தவிர, பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.  

தமிழில் 'வேதம்', 'பாளையத்தம்மன்', 'சபாஷ்', 'கண்ணன் வருவான்' ஆகிய பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. தமிழை தவிர, பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். பல்வேறு நடன நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை திவ்யா உன்னி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கணவர் டாக்டர் சுதீரிடம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்று பிரிந்தார். பின்னர் ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவருடன் நட்பாக தொடர்ந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் அவரையே மறுமணம் செய்துக்கொண்டார்.

இவருக்கு ஏற்கனவே அர்ஜூன் மற்றும் மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த திவ்யா உன்னிக்கு. ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதம் ஆன நிலையில் தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு முதல் முறையாக சாதம் ஊட்டிய போது, எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில், திவ்யா உன்னியின் மூன்றாவது குழந்தை பார்ப்பதற்கு ஆச்சு அசல் திவ்யா உன்னி போலவே உள்ளது. இதை பார்த்து பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

View post on Instagram
View post on Instagram