டோனி திரைப்படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. இவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்ததால், தற்போது சல்மான் கான் நடித்து வரும் பாரத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைதுள்ளது.

இந்த படத்தில் இவர் மிகவும் சிறிய கதாப்பதிரத்தில் தான் வருவதாக கூறப்படுகிறது.

கவர்ச்சி:

ஏற்கனவே நடிப்பு மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்த திஷா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வந்தார்.

ஜிம்மிலும் ஹாட்:

இவர் சாதரணமாக வெளியிடும் புகைப்படங்களை விட, ஜிம்மில்  ஓர்கவுட் செய்து கொண்டு கொண்டே  வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நிறைய லைக்குகளை அள்ளி வருகிறது.

சிக்ஸ் பேக் ஹிட்:

ஹாட் நடிகைகள் மத்தியில், இவர் தன்னுடைய சிக்ஸ் பேக் இடுப்பை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வருவதை ரசிகர்கள் மிகவும் விரும்புவதாகவும், இவர் இது போன்ற செயல் மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவதாகவும் கூறி வருகிறார்கள்.