Asianet News TamilAsianet News Tamil

இந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க... ஆணித்தமனாக நம்பியவருக்கு நன்றி சொன்ன துஷாரா! உணர்வு பூர்வமான பதிவு!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை நாளுக்கு நாள் பாராட்டுக்கள் அதிகரித்து வருகிறது. 
 

actress dhushara vijayan emotional words for sarpatta parambarai movie
Author
Chennai, First Published Jul 28, 2021, 3:49 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள  ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை நாளுக்கு நாள் பாராட்டுக்கள் அதிகரித்து வருகிறது. 

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்  ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் அதிகம் கவனம் ஈர்த்துள்ளார். இவர் திண்டுக்கல் பகுதியில் பிறந்து, சென்னையில் படித்து வளர்ந்த பெண் என்பது கூடுதல் சிறப்பு. இதன் காரணமாகவோ என்னவோ வடசென்னை பாஷையை சற்றும் பிசுறு தட்டாமல் பேசி, ஒவ்வொரு எமோஷனையும் உள்வாங்கி நடித்திருந்தார்.

actress dhushara vijayan emotional words for sarpatta parambarai movie

ஆர்யாவை மிரட்டும்போதும் சரி, ஆர்யா காலில் விழுந்து அழும் போது சரி... உன்ன விட்ட எங்க போவேன் என கணவர் மீது பாசத்தை கொட்டும் போது, ரசிகர்கள் நெஞ்சங்களை கவர்ந்து விட்டார். இந்நிலையில், இந்த படத்தில் ஆரம்பத்தில் சிலர் தன்னை வேண்டாம் என நிராகரித்த போதிலும் பா.ரஞ்சித் தான் நம்பி நடிக்க வைத்ததாக கூறி தன்னுடைய நன்றிகளை உணர்வு பூர்வமான வார்த்தைகளால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதுவும் தமிழில் பதிவு செய்துள்ளார்.

actress dhushara vijayan emotional words for sarpatta parambarai movie

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... "எல்லா கனவுகளும் நிஜம் ஆகுமான்னு என்ன கேட்டா எனக்கு தெரியாது, ஆனா ஜூலை 22, என் வாழ்னாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகிருச்சு. சார்ப்பட்டாவின் வெற்றி இது. என்னால வார்த்தைகலால சொல்ல முடியாத வெற்றி! குடுத்த வேலைய ஒழுங்கா பன்னிருக்கேன்னு ரொம்ப மனசுக்கு நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கு. மாரியம்மா என் வாழ்க்கைல ரொம்ப சந்தோஷத்த தந்திருக்கா, எல்லாரும் அவள கொண்டாடுரத அவ்வளவு அழகா என்ன ஃபீல் பன்ன வச்சுட்டா. எல்லாரும் இந்த பொண்ணு வேணாம்னு சொன்னப்ப இவதான் மாரியம்மானு ஆணி தனமா நம்புன ரஞ்சித் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது. எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை போதும், எத வேணும்னாலும் பன்னிரலாம். அப்படி ஐய்யா நம்பி, நான் உயிர் குடுத்தவ மாரியம்மா. நான் ரொம்ப விரும்பி மாரியம்மாவாக நடிச்சேன். முதல் பெரிய படம், நீங்க ஒவ்வொருத்தரும் வாழ்த்துகள் சொல்லும்போது ரொம்ப மெய் சிலிர்க்குது, ரொம்ப பயமும் வருது. பெரிய நன்றி எல்லாருக்கும் மாரியம்மாவ சரியான வகைல புரிஞ்சுகிட்டதுக்கு. படத்துல என் கூட நடிச்ச எல்லாருக்கும் நன்றி மட்டும் சொன்னா பத்தாது. கபிலன் எனக்கு ஒரு பெரிய உருதுணையா இருந்தாரு. படத்துல நடிச்ச எல்லாருமே அவங்க நடிப்பு கொண்டாடப்படனும்னு தான் நடிச்சு இருக்கோம். துணை எழுத்தாளர் தமிழ் பிரபா அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லனும், அவ்வளவு சரளமாக நான் வடசென்னை பேச்சு வழக்கு பேசுரதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்." என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios