Asianet News Tamil

நிறைவேறாமல் போன சிரஞ்சீவி சார்ஜாவின் கடைசி ஆசை... கண்ணீரை வரவழைக்கும் வாட்ஸ் அப் மெசெஜ்...!

இதனிடையே நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் கடைசி ஆசை குறித்த மெசெஜ் ஒன்று வெளியாகியுள்ளது. 

Actress Chiranjeevi Sarja Last Wish Whats app message will bring Tears
Author
Chennai, First Published Jun 11, 2020, 6:22 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பழம் பெரும் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் சகோதரி மகனனுமான (மருமகன்) கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நேற்று மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது. 2009ம் ஆண்டு வயுபுத்ரா என்ற கன்னட படம் மூலம் அறிமுகமான சிரஞ்சீவி சார்ஜா, இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவரது கைவசம் 4 படங்கள் இருந்துள்ளன. 

இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சு திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் பிரபல நடிகையும், சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியுமான மேக்னா ராஜ் தற்போது  4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 10 ஆண்டுகளாக காதலித்த சிரஞ்சீவி சார்ஜாவும், மேக்னா ராஜும் 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டுகள் இன்பமயமாக நகர்ந்த இவர்களது காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக மேக்னா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். முன்னதாகவே இதை அறிவிக்கலாம் என இருவரும் நினைத்துள்ளனர். ஆனால் ஆரம்ப கட்டம் என்பதால் சிறிது காலம் பொறுத்திருந்து அறிவிக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த செய்தி உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இதெல்லாம்... வைரலாகும் “அன்றே கணித்த சூர்யா” மீம்ஸ்... ஸ்பெஷல் தொகுப்பு...!

அண்ணனின் பிரிவை தாங்க முடியாத தம்பி துருவ் சார்ஜா, அண்ணன் தன்னை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்பதற்காக தனக்கு சொந்தமான பண்ணை வீட்டிலேயே உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையடுத்து சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் சொந்த ஊரான ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே நெலுகுலி கிராமத்தில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கின் போது சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் மீது படுத்து கர்ப்பிணியான மேக்னா ராஜ் கதறி அழுத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காண்போரை கண் கலங்க வைத்தது. 

இதையும் படிங்க: ஆண் நண்பருக்கு முத்தம்... பர்த்டே பார்ட்டியில் தாறுமாறாக விளையாடும் அமலா பாலின் வைரல் வீடியோ...!

இதனிடையே நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் கடைசி ஆசை குறித்த மெசெஜ் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தனது நண்பரான பிரஜ்வால தேவ்ராஜிடம் வாட்ஸப்பில் சேட் செய்துள்ள சிரஞ்சீவி சார்ஜா, ஐ லவ் யூ கய்ஸ், லாக்டவுனுக்கு பிறகு ஒருவாரம் டூர் செல்ல வேண்டும், நாம் மட்டும் தான் ப்ரெண்ட்ஸ், நாம் இழந்தவைகள் குறித்து பேசலாம்... நாம் ஒன்றாக இருப்பதை விட விலை உயர்ந்தது ஏதுமில்லை... நாளைக்கு நமக்கு என்ன ஆகும் என்று தெரியாது என்று சேட் செய்துள்ளார். இளம் வயதில் தனது இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் எமன் இவரை அழைத்துச் சென்றுவிட்டாரே என ரசிகர்கள் கதறுகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios