இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் விவாகரத்து பெற்ற  பின்னர் நடிகை அமலா பால் முழுக்க திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.  ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். முழுக்க ஹீரோயினை மையமாக கொண்ட அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆடுஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகிய படங்களும் அமலா பாலின் கைவசம் உள்ளது. 

இதையும் படிங்க: புடவையிலும் அடங்காத கவர்ச்சி... ஊரடங்கில் ஹாட் வீடியோஸை வெளியிட்டு கிளுகிளுப்பு கூட்டும் கிரண்...!

இடையில் மும்பையைச் சேர்ந்த பாடகரான பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த புகைப்படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நொடியில் இருந்தே சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது. 

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

இதையடுத்து அந்த புகைப்படங்கள் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது என்றும், அமலா பால் இப்போதைக்கு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லை என்பதும் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள அம்மாவுடன் தங்கியுள்ள அமலா பால் நாள்தோறும் கலக்கலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் தனது நண்பர்களுடன் ஜாலியாக பொழுது போக்குகிறார். நேற்று   இரண்டு ஆண் நண்பர்களுக்கிடையே கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் கெத்தாக நின்று போஸ் கொடுத்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

இந்நிலையில் மற்றொரு ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அந்த ஆண் நண்பரின் மொட்டை தலையில் அமலா பால் நச்சென முத்தமிடும் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. உபூ என்ற பெயரை கொண்ட அந்த நபரை உங்களை போல் உங்கள் எண்ணங்களும் ஃபிரியாக சுற்றட்டும் என பதிவிட்டுள்ளார். அத்துடன் அமலா பால் ஷேர் செய்துள்ள வீடியோவில் அந்த நண்பரின் மொட்டை தலையில் கேக் பூசி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.