கொரோனா வைரஸின் தாக்கத்தால் திரையுலகினர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. திரையுலகை பொறுத்தவரை அமிதாப் பச்சனில் தொடங்கி நடிகை தமன்னா வரை பலரையும் கொரோனா பாடாய் படுத்தி வருகிறது. தற்போது ஷூட்டிங் வேலைகள் வேறு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தெலுங்கு, தமிழ், இந்தியில் முன்னணி நடிகையாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சார்மியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனது பெற்றோர் மார்ச் மாதத்திலிருந்து தங்கள் ஹைதராபாத் வீட்டில் கடுமையான ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். தங்களை அதிக பட்சமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

இதையும் படிங்க: இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!

ஆனால் ஐதராபாத் வெள்ளம் மற்றும் மாசு காரணமாக எனது பெற்றோர் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். அதை அறிந்து மனம் உடைந்தேன் . அம்மாவும் அப்பாவும் உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவர் நாகேஸ்வர் ரெட்டி. நான் பல ஆண்டுகளாக அவரை அறிந்திருக்கிறேன், அவர் மீது எனக்கு கண்மூடித்தனமான நம்பிக்கை உள்ளது. அவரது அற்புதமான மருத்துவர்கள் குழு எனது பெற்றோரை மிகவும் நல்ல முறையில் கவனித்து வருகின்றனர் . மேலும் எனது பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையும் நன்றாகப் பலனளித்து வருகிறது.  மருத்துவமனையில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் நான் மிகவும் நன்றி தெரிவிக்கிறேன் ” என பதிவிட்டுள்ளார்.