அறிமுகம்:

தமிழில் 'காதல் அழிவதில்லை' என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சார்மி, இந்த படத்தை தொடர்ந்து 'லாடம்' , ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் இருந்தார். 

கவர்ச்சி:

கவர்ச்சி வேடங்களில் கூட மிகவும் துணிச்சலாக நடித்த இவருக்கு தற்போது வயது அதிகமாகிவிட்டதால் பட வாய்புகள் குறைந்துவிட்டதாககிக் கூறப்படுகிறது. 

தயாரிப்பாளர்:

இதனால் தயாரிப்பாளராக மாறி படத்தயாரிப்பில் மும்புரம் காட்டி வரும் சார்மி காதல் தோல்வி காரணமாக இனி திருமணமே செய்துக்கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய இவர்....

'என் வாழ்க்கையில் ஒருவரை மிகவும் உண்மையாக காதலித்தேன். 2 விஷயங்களால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது ஒருவேளை நாங்கள் திருமணம் செய்துக்கொண்டிருந்தாலும் எங்களுடைய காதல் தோல்வியில் முடிந்திருக்கும். 

திருமணமே வேண்டாம்:

அந்த நடவடிக்கை காரணமாக திருமணத்தின் மீதே வெறுப்பு வந்துவிட்டது. காதல் மற்றும் திருமணம் மீதான நம்பிக்கையும் போய் விட்டது. ஆனாலும் அவர் மிகவும் நல்லவர். 

இதனால் இன்னொருவரை திருமணம் செய்துக்கொள்வது பற்றி என்னால் சிந்திக்க கூட முடியவில்லை ஒருவரை காதலித்து விட்டு மற்றொருவருடன் சேர்ந்து வாழ்வது , அவருக்காக காத்திருப்பது, நேரம் ஒதுக்குவது வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என்ற வேலைகள் இனி என் வாழ்க்கையல் வேண்டாம் என நினைக்கிறேன். திருமணம் செய்துக்கொண்டால் தானே இப்படி எல்லாம் நடக்கும் இதனால் இப்படி பட்ட திருமணமே வேண்டாம் என்கிற முடிவில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ரசிகர்கள் ஆறுதல்:

தன்னுடைய காதலரின் பெயரை வெளியிட விருப்பம் இல்லை என்று மிகவும் உருக்கமாக சார்மி பேசியுள்ளது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் சார்மிக்கு சமூக வலைதளத்தின் மூலம் சமாதானமும் கூறி வருகின்றனர். 

புலம்பும் பெற்றோர்:

ஏற்கனவே சார்மிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், இவருடைய பெற்றோர் இவரை சமாதானம் செய்து திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்திருந்தனர். ஆனால் சார்மி தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என அனைவர் மத்தியிலும் கூறி இருப்பது பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தன்னுடைய மகள் திருமணத்திற்காக பல கோவில்களுக்கு சென்று கடவுளிடம் தங்களுடைய பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அழுது புலம்பி வருகிறார்களாம்.