நடிகை சைத்ரா:

பிரபல கன்னட நடிகை சைத்ரா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தொழிலதிபர் பாலாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் . இந்நிலையில் தற்போது தன்னை கணவர் அடித்து கொடுமை படுத்துவதாகவும். கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது என கூறி புவனேஸ்வரில் உள்ள போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி கண்டன திரையுலகில் அனைவருக்கும் அதிர்ச்சியாக்கியுள்ளது. 

இது குறித்து அவர் புகார் கொடுத்துள்ள மனுவில் சைத்ரா கூறியிருப்பது:

திருமணத்திற்கு பின் தன்னை கணவர் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்தார். மோசமான வார்த்தைகளால் திட்டி சித்திரவதை செய்தார். நான் வெளியில் எங்கு சென்றாலும் துப்பாக்கியுடன் இரண்டு அடியாட்களை அனுப்புவார். என்னுடைய பெற்றோரை பார்க்க சென்றால் கூட அடியாட்களும் கூட வருவார்கள் இதனால் தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டது.

சினிமாவில் நடிக்கக்கூடாது என்று தடுத்தார், பின் நான் ஒரு சில டிவி தொடர்களை தயாரித்தேன் அதில் வந்த லாபத்தையும் பறித்துக்கொண்டார்.

காரின் செல்லும்போது கூட தங்கள் இருவருக்கும் தகராறு நடக்கும், அப்போதெல்லாம் என் தலையில் ஓங்கி குட்டுவார்... கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்ய கூட பல முறை முயற்சி செய்துள்ளார். 

மேலும் இவர் தாக்கி கயமடைந்ததர்க்காக நான் பல முறை முறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளேன். என்றும் தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்றும் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். 

இவர் கொடுத்துள்ள புகாரின் மீது போலீசார் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்