'கொரேனோ' வைரஸ் பாதிப்பால், தற்போது வரை 300 க்கும் மேற்பட்டவர்கள் சீனாவில் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர மற்ற இடங்களுக்கும், தற்போது படிப்படியாக  'கொரேனோ' வைரஸ் பரவி வருகிறது.

 'கொரேனோ' வைரசை கட்டுப்படுத்த, சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் நாடு முழுவதும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  தமிழகத்தில் மட்டும், சென்னையில் மூன்று பேர்  'கொரேனோ' வைரசால் பாதிப்பு அறிகுறியுடன் ராஜு காந்தி மருதுவானமையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், திருவண்ணாமலை, திருச்சி, உள்ளிட்ட மாவத்தை சேர்ந்த மொத்தம் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில், நடிகர் விவேக், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து, 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் போண்டா மணியும்  'கொரேனோ' வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு தகவல் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர்,  இதுபோன்ற வதந்திகள் ஆதாரமற்றவை என்றும், தான் நலமுடன் உள்ளதாக தெரிவித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.