நடிகை பூமிகா :

தமிழில் தளபதி விஜய் நடித்த, 'பத்ரி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர் நடிகை பூமிகா. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடித்த 'ரோஜா கூட்டம்' படத்தில், இவர் தோன்றிய ஒவ்வொரு காட்சியிலும் இவர் வெளிப்படுத்திய நடிப்பை  பலராலும் மறக்க முடியாது.

பல மொழிகளில் சிறகடித்து பூமிகா:

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தினார்.

திருமணம்:

முன்னணி நடிகையாக இருக்கும் போதே.. கடந்த 2007 ஆம் ஆண்டு, பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய மகன் ஒருவரும் உள்ளார்.

தொடர்ந்த நடிப்பு:

திருமணத்திற்கு பின்பும் தொடந்து கதாநாயகியாக,  பூமிகாவால் நடிக்கமுடியவில்லை என்றாலும், குணச்சித்திர வேடம் மற்றும் ஆழமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்தார். 

நீண்ட இடைவெளி:

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின், சமந்தா நடித்த யு டர்ன், நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்களில் நடித்த பூமிகா, தற்போது 'கண்ணை நம்பாதே' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

வில்லி அவதாரம்:

சரியான கம் பேக் படத்திற்காக நீண்ட வருடங்களாகவே காத்திருக்கும் பூமிகா, அடுத்ததாக தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாக உள்ள படத்தில் மிரட்டல் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை, போயப்பட்டி சீனு இயக்குகிறார். அழுத்தமான கதாபாத்திரம் இருந்தால் போதும், எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி நடிக்க தயார் என அதிர்ச்சி கொடுக்கிறாராம் பூமிகா. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.