தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக 80களில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பானுபிரியா... திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி வெளிநாட்டிற்கு பறந்தார். 

பல்வேறு கனவுகளுடன், திருமண வாழ்கையில் இணைந்த இவர், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே கணவருடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்று பிரிந்தார். 

பின் மீண்டும் சென்னைக்கு திரும்பிய இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். மேலும் சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் கூட இவருடைய நடிப்பில், சிவலிங்கா, மகளிர் மட்டும், ஆகிய படங்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், படவாய்புகள் இல்லாததால், இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக மாறியுள்ளார். இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள, சாவித்திரியின் வாழ்கை வரலாறு படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திற்கு இவர் குரல் கொடுத்து வருகிறாராம். 

தற்போது இப்படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இறுதிக்கட்ட பணிகள் விரைவில் நிறைவடையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.