actress asia argento sexual harremt complient for producer

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொள்ள வந்தபோது, பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த, பிரபல நடிகை ஏசியா அர்ஜெண்டோ. இந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, கடந்த 1997ஆம் ஆண்டு தான் இதே கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்தபோது, தன்னை தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் அப்போது தனக்கு 21 வயது என்பதால், அவரை எதிர்த்து தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அடுதுமட்டும் இன்றி, அடுத்த 5 ஆண்டுகள் அவர் கூறியபடியெல்லாம் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் என்றும் இல்லையெனின் என்னுடைய கேரியர் நாசமாகிவிடும் என்பதால் அனைத்தையும் பொருத்துக்கொண்டதாக தெரிவித்தார். இவரின் இந்த பேச்சால், கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

பல பிரபலங்கள் கூடி இருந்த அரங்கில் இவர், தயாரிப்பாளர் மீது வைத்த, குற்றச்சாட்டை மறுத்த இயக்குனர் ஹார்வியின் வழக்கறிஞர், 'நடிகை ஏசியா இயக்குனர் ஹார்வியுடன் விருப்பப்பட்டு தான் உறவு கொண்டார். அதனால் தான் 'பி மங்கீ' என்ற படத்தில் நடித்ததில் நடித்தார் என தெரிவித்துள்ளார்.