வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது அஜித்தின் விஸ்வாசம்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான இந்த இரண்டு படங்களின் ட்ரெய்லர்களும் ரசிகர்களை எதிர்பார்ப்பில் தள்ளியுள்ளது. 

முதலில் வந்த பேட்ட டிரெய்லர் அனல் தெறிக்கும் வசனங்களால் விஸ்வாசம் அஜித்தை நோக்கியே இருப்பதாக சொல்லப்பட்டது. இதற்க்கு ஒரு நாள் கேப் விட்டு வெளியான விஸ்வாசம் டிரெய்லர் பேட்ட   ட்ரெய்லர்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக  வந்ததாக வலைதளங்களில் பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் வரும்  என்ன பங்காளிகளா, அடிச்சிதூக்கலாமா என்று புத்தாண்டு வாழ்த்து சொல்லி ட்வீட் போட்ட ஆர்த்தியிடம்  பொங்கலுக்கு விஸ்வாசம், பேட்ட ஆகிய படங்களில் எதை முதலில் பார்ப்பீர்கள் என்று நடிகை ஆர்த்தியிடம் ரசிகர்கள் கேட்டனர்.  இதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் பொங்கலுக்கு முதலில் விஸ்வாசம் படத்தை தான் முதலில் பார்ப்பேன்  அதன் பிறகே பேட்ட படத்தை பார்ப்பேன் என தல ரசிகையான நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.