actress arthana cried on the stage itself
பட விழாவில் மேடையிலேயே தேம்பி அழுத நடிகை..!
ஜி வி பிரகாஷ் அர்த்தனா ஜோடியாக நடித்துள்ள படம் செம. இந்த படத்தை வள்ளிகாந்த் என்பவர் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் பாண்டியராஜ், ரவிச்சந்திரன்.இந்நிலையில் இந்த படத்தில் பாடல், ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழுவினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது திடீரென மேடையிலியே அழுதார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட்டது.
இதனை தொடர்ந்து விழாவில் டைரக்டர் பாண்டியராஜ் பேசும் போது, கதாநாயகி திடீரென அழுததால் அவருக்கு ஏதாவது படப்படிப்பில் பிரச்சனை என்று நினைத்து விட வேண்டாம்... அப்படி ஒன்றும் கிடையாது என தெரிவித்து இருந்தார்

இந்த படத்தில், திருமணத்திற்கு முன்பாக ஒரு வாலிபர் பெண் பார்க்கும் போது எப்படியல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையாக எடுத்து உள்ளோம் என தெரிவித்து உள்ளார்
பின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா பேசினார்...

அப்போது," படப்படிப்பில் டைரக்டரோ அல்லது தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை...நான் அழுததற்கு வேறு காரணம் உள்ளது...எளிதில் நான் உணர்ச்சி வசப் படக் கூடியவள்...
படப்பிடிப்பில் இயக்குனரும் நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன்.....எல்லோருடைய வாழ்கையும் இந்த படத்தில் உள்ளது...அதை நினைத்து இந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்பதை நினைக்கும் போது தான் என்னை மீறி அழுது விட்டேன் என தெரிவித்து உள்ளார்

நான் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன்...ஏற்கனவே தொண்டன் படத்தில் நடித்து உள்ளேன்......அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
