கடந்த 2 மதத்திற்கு முன் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த பிரபல நடிகை பாவனா மர்ம நபர்களால் சமீபத்தில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில்.

தற்போது இன்னொரு பிரபல நடிகையும் மாடல் அழகியுமான அர்ச்சனாவை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் நடிகை அர்ச்சனா கௌதமுக்கு சமூக வலைதளம் மூலம் ஒருவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அவர் அர்ச்சனாவிடம் ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், தன்னுடன் வந்தால் ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கித் தருவதாகவும் அழைத்துள்ளார். 

இதனை நம்பிய அர்ச்சனா அந்த நபருடன் காரில் சென்றுள்ளார். போகும் வழியில் அதே காரில் மேலும் நான்கு பேர்கள் நண்பர்கள் என அறிமுகமாகி ஏறியுள்ளனர். அதன் பின்னர் திடீரென நாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றும், உன் மீது விபச்சார வழக்கு தொடருவோம் என்றும் அர்ச்சனாவை மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் தந்தால் விட்டுவிடுவதாக கூறியுள்ளனர்.
 
உடனே அர்ச்சனா தன் அண்ணனுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூற, அவர் பணத்தை எடுத்துக் கொண்டு விமான நிலையம் அருகில் வருவதாக கூறியுள்ளார். 

இதனால் கடத்தல் கும்பல் காரை விமான நிலையத்திற்கு ஓட்டி சென்று அங்குள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளனர். அப்போது அர்ச்சனா காரில் இருந்து திடீரென கூச்சல் போட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அர்ச்சனாவை காப்பாற்றினர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த கடத்தல் கும்பல் தப்பித்து ஓடியது. ஆனாலும் ஒருவர் பிடிபட்டதாகவும் அவரிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. பாவனாவை தொடர்ந்து இதுபோல மற்றொரு நடிகை கடத்த பட்ட சம்பவம் பிரபலன்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.