இயக்குனர் சுரேந்திர ரெட்டி இயக்கும், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகை அனுஷ்கா தற்போது நடித்து வருகிறார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் சுதந்திர பின்னணியை கொண்ட வரலாற்றுப் படமாக உருவாகிறது.

இதில் நடிகர் சிரஞ்சீவி, கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா,  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.  

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் நடிகை அனுஷ்கா, குறிப்பிட்ட காட்சியில் நடித்த போது , எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு காலில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,   அனுஷ்காவிற்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், கண்டிப்பாக ஒரு வாரம் வரை அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அனுஷ்காவின் ரசிகர்கள் அவருடைய உடல்நலம் குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விசாரித்து வருகின்றனர்.