குட்டி குழந்தையாய், இரண்டு சகோதரர்கள் கையில் அழகாய் அமர்ந்திருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிந்தால், கண்டிப்பாக உங்களுக்கே ஆச்சர்யமாக தான் இருக்கும்.

அவர் வேறு யாரும் இல்லை, தமிழில்... விஜய், அஜித், மாதவன், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி தான்.

இயக்குனர் பூரி ஜகனந்தன் இயக்கத்தில், தெலுங்கில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான, 'சூப்பர்' படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் காலடி எடுத்து வைத்து, கிட்ட தட்ட 15 வருடங்களாக முன்னணி நடிகை என்கிற இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா.

முதல் படத்தின் வெற்றிக்கு பின், அடுத்தடுத்து வரிசையாக பல  தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக கடந்த 2006 ஆண்டு வெளியான  'இரண்டு' படத்தில் நடித்தார். அதிகப்படியான தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது, தமிழில் விஜய், சூர்யா, அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டினார்.

மேலும், இவர் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'அருந்ததி' திரைப்படம் இவருடைய திரையுலக வாழ்க்கையையே புரட்டி போட்டு, இவரை தனி நாயகியாக உயர செய்தது.

இந்த படத்திற்கு பின், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். 2018 ஆம் ஆண்டு இவர் நாயகியாக நடித்த 'பாகமதி' திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து விரைவில், 'நிசப்தம்' திரைப்படம் வெளியாக உள்ளது.

இவர் அழகில் அசரவைக்கும் பல புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்திருந்தாலும், பால் முகம் மாறாத, பச்சை குழந்தையாய் தவழும் புகைப்படங்களை பெரிதாக பார்க்க வாய்ப்பில்லை.

அந்த வகையில், நடிகை அனுஷ்கா அவருடைய இரு சகோதரர்களுடன் சிறிய வயதில் எடுத்து கொண்ட அறிய புகைப்படங்களில், நீங்கள் பார்த்து ஆச்சர்யப்பட்டு போகும் இந்த புகைப்படமும் இதுவும் ஒன்று.