Asianet News TamilAsianet News Tamil

நிறைமாத வயிறுடன் ட்ரெட்மில் ட்ரெயினிங்... வைரலாகும் கர்ப்பிணி அனுஷ்கா சர்மாவின் வீடியோ...!

நிறைமாத வயிறுடன் ட்ரெட்மில்லில் நடைப்பயிற்சி செய்யும் அனுஷ்கா சர்மாவின் வீடியோ தான் அது

actress Anushka sharma pregnancy  treadmill work out video going viral
Author
Chennai, First Published Jan 6, 2021, 7:49 PM IST

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்திருந்தனர். அதன் பின்னர் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

actress Anushka sharma pregnancy  treadmill work out video going viral

விரைவில் அம்மாவாக உள்ள அனுஷ்கா சர்மா உலகின் மிகவும் பிரபலமான மேகஸினான வோக் பத்திரிக்கைக்கு தனது நிறைமாத வயிறுடன் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்த போட்டோ ஷூட்  ஒன்று  சமீபத்தில் வெளியாகி உலக அளவில் கவனம் ஈர்த்தது. அனுஷ்கா சர்மாவிற்கான பிரசவ தேதியை மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

actress Anushka sharma pregnancy  treadmill work out video going viral

நிறைமாத வயிறுடன் ட்ரெட்மில்லில் நடைப்பயிற்சி செய்யும் அனுஷ்கா சர்மாவின் வீடியோ தான் அது. உடற்பயிற்சி உடையுடன் துளியும் சோர்வின்றி பயிற்சி மேற்கொள்ளும் அனுஷ்காவின் வீடியோ இதோ... 

"

Follow Us:
Download App:
  • android
  • ios