நடிகை அனுஷ்கா, நடிகர் ஆர்யாவுடன் 2015 ஆம் ஆண்டு நடித்த திரைப்படம், 'சைஸ் ஸிரோ' பெண்கள் ஒல்லியாக இருக்க ஆசை பட்டு, அதனால் ஏற்படும் சில விளைவுகள் பற்று எடுத்து கூறும், விழிப்புணர்வு படமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம், நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக, உடல் எடையை அதிகரித்து நடித்தார் அனுஷ்கா. 

இந்த படத்தை அடுத்து, மீண்டும் உடல் எடையை குறைக்க கடின உடல் பயிற்சி மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் மேற்கொண்டும் குறிப்பிட்ட எடையை மட்டுமே இவரால் குறைக்க முடிந்தது. எனவே இந்த படத்தை தொடர்ந்து வெளியான, பாகுபலி, பாகமதி, மற்றும் சில தெலுங்கு படங்களில் இவரின் தோற்றம் சற்று குண்டாக தான் இருந்தது.

பாகுபலி படத்தில் இவரை ஒல்லியாக காட்ட ஸ்பெஷல் vfx  எடிட்டிங் மூலம் சற்று ஒல்லியாக காட்டியதுடன், அழகிலும் மிரட்டி இருந்தனர்.

இந்நிலையில் விரைவில் அனுஷ்கா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள திரைப்படம் நிசப்தம். இந்த படத்தில், மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் தான் நடித்த காட்சிகளை பார்த்த அனுஷ்கா, ஒரு சில காட்சிகளில் தான் குண்டாக இருப்பதாக பீல் பண்ணி தயாரிப்பாளரிடம் ஸ்பெஷல் vfx  காட்சி மூலம் தன்னை ஒல்லியாக காட்டும் படி அனுஷ்கா கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், அனுஷ்காவின் பேச்சை மீள முடியாமல், தயாரிப்பாளர் அனுஷ்காவை ஒல்லியாக காட்டுவதற்காக, சில கோடிகளை செலவு செய்து vfx எடிட்டிங்கிற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். அனால் இப்படி பரவும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை படக்குழு தான் கூறவேண்டும்.