நடிகை அனுஷ்கா, 'பாகமதி' படத்திற்கு பின், நடிக்க வந்த வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்து வந்ததால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார் என்றே, அனைவரும் நினைத்தனர். திருமண வேளையில் முனைப்பு காட்டும் விதமாக, அனுஷ்கா பெற்றோருடன் பல்வேறு பூஜை செய்து வந்தனர்.

ஆனால் கணிசனமாக உடல் எடையை குறித்த பின்னர், தற்போது 'நிசப்தம்' என்ற படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் அனுஷ்கா.

இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது.  இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'நிசப்தம்' திரைப்படம், அடுத்த மாதம் வெளியாக உள்ளதை ஒட்டி , படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்கு பின், அனுஷ்கா தற்போது மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து, படத்தை ப்ரமோட் செய்யவுள்ளார்.