ஷூட்டிங் ஸ்பாட்டில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா என்று ஆளாளுக்கு விசனப்பட்டுக்கொண்டிருக்க அவரோ,ஹலோ பாஸ் நான் அமெரிக்காவுல ஷூட்டிங்ல இருக்கேன்’என்று ட்விட் பண்ணியிருக்கிறார்.

சிரஞ்சீவின் மெகா புராஜெக்டான ‘ஷைரா நரசிம்ம்மா ரெட்டி’படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்த நாளில் படப்பிடிப்பில் சிறு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆன அவர், அங்கிருந்து நேராக அமெரிக்கா பறந்து சியாட்டில் நகரில் நடக்கும் ‘நிஷப்தம்’படப்பிடிப்பில் மாதவனுடன் ஜோடி சேர ஆரம்பித்துவிட்டார்.

அத்தகவல் தெரியாத சில அப்பாவிகள் இன்னும் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுஷ்கா சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் நலம்பெறவேண்டி பிரார்த்தனைகள் செய்துவருவதாகவும் தெரியவந்தது. ‘அடடே விட்டா நம்மள டிஸ்சார்ஜ் பண்ணாம ஆஸ்பத்தியிலேயே இருக்கவச்சிருவாங்களோ என்று பயந்த அனுஷ்கா, சற்று முன்னர் தனது சியாட்டில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ட்விட்டர் பக்கத்தில் ‘நான் நலமாக இருக்கிறேன்.படப்பிடிப்பில் சியாட்டில் நகரில் இருக்கிறேன்.எல்லோருக்கும் என் அன்பு’ என்று செய்தி பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram

😘😘

A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on Jun 26, 2019 at 11:15pm PDT