ஓவ்வொரு வருடமும் அதிகம் சம்பாதித்த நடிகர் யார், அழனாக நடிகர் யார், நடிகை யார், சர்ச்சையில் சிக்கியது யார், என்பது போன்ற பல கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. இப்படி வெளியாகும் கருத்து கணிப்புகளை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள்.

அந்த வகையில், லண்டனை சேர்ந்த, ஈஸ்டர்ன் ஐ என்கிற பத்திரிக்கை நிறுவனம் ஆசியாவில் உள்ள செக்ஸியான ஆண் மற்றும் பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தி வந்தது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட செக்ஸியஸ்ட் ஆண்கள் யார் என்கிற பட்டியலில் நடிகர் ரித்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட, செஸ்சியஸ்ட் பெண்கள் 50 பேரின் பட்டியல் வெளியிட்டுள்ளது.  

டாப் 10 பட்டியலில், ஷிவங்கி ஜோஷி 5 வது இடத்தையும், ஆலியா பட் 6 வது இடத்தையும், சோனம் கபூர் 7 வது இடத்தையும், ஹினா கான் 8 வது இடத்தையும், கத்ரீனா கைப் 9 ஆவது இடத்தையும், நித்தி டைலர் 10 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் முதல் முறையாக தமிழ் நடிகையின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  நடிகை அனுஷ்கா ஷெட்டி 22 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்த தகவலை நடிகை அனுஷ்காவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.