அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ என்கிற தெலுங்கு படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் ஆஷிஷ் ரெட்டி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும், இதன்பின் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காத்தால் தெலுங்கு பக்கம் சென்றார் அனுபமா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா. தற்போது அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ என்கிற தெலுங்கு படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் ஆஷிஷ் ரெட்டி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இப்படம் வருகிற ஜனவரி 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனால் தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அதில் இடம்பெறும் லிப்லாக் காட்சியை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

சினிமாவில் அறிமுகமானபோது நெருக்கமான காட்சிகள், முத்த காட்சிகளில் நடிக்கமாட்டேன் என கூறி இருந்த அனுபமா, இந்த படத்திற்காக லிப்லாக் காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர். முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடிக்க அவர் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.