பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்து பிரபலமானார்.

பின் தமிழில் வலுவான கதாப்பாத்திரம் அமையாததால், தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர், தெலுங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு மகளாக 'குரு பிரேமகோஷம்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவர் நடித்து கொண்டிருந்த போது, படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி கிழே விழுந்ததாக கூறப்படுகிறது.  இதனால் உடனடியாக இவரை படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதுகுறித்து இவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், இவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு வாரத்தில் உடல் நலம் குணமடைந்து விடும் என்றும், பின் இவர் இவருடைய பணியை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.