Actress Anjali likes politics maybe she jump into politics

தற்போதுள்ள நடிகைகளில் பல பேர் அரசியலில் இறங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கெனவே ஹேமமாலினி, ஜெயப்ரதா, ரோஜா, விந்தியா, நமீதா போன்ற பல நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை அஞ்சலிக்கும் அரசியலில் ஈடுபாடு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அஞ்சலி ஒரு பேட்டியில் கூறியது:

‘‘எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும். அதன்மீது எப்போதுமே நான் தனி கவனம் செலுத்துவேன்’’ என்று தெரிவித்தார்.

இந்தப் பேச்சால் நடிகை அஞ்சலி அரசியலில் ஈடுபடுவாரோ? என்று சினி வட்டாரங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கையில் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று ஒருபக்கம் பரப்பி வருகின்றனர்.