actress anjali acting debut in tamil movie

'கற்றது தமிழ்' படத்தில் அறிமுகம் கொடுத்த நடிகை அஞ்சலி, பின் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் பட்டியலில் இடம்பிடித்தார்.

தற்போது 'எங்கயும் எப்போதும்' படத்திற்கு பிறகு இவர் ஜெய்யுடன் நடித்துள்ள 'பலூன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இவரும் நடிகர் ஜெய்யும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட விஷயத்திற்க்கு சமீபத்தில் முற்று புள்ளி வைத்த அஞ்சலி.

இப்போது மற்றொரு வதந்திக்கும் முற்று புள்ளி வைத்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடிகை அஞ்சலியில் சகோதரியும் தமிழில் படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகிறார் என்கிற ஒரு தகவல் வெளியானது.

இதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ள அஞ்சலி, தன்னுடைய சகோதரி திருமண வாழ்வை சந்தோஷமாக அனுபவித்து வருகிறார். அவர் திரைப்படத்தில் நடிக்கிறார் என்று வரும் தகவல் முற்றிலும் பொய் என்று கூறியுள்ளார்.