தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த படத்தின் வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் அஜித் தற்போது, அடுத்த படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தை,  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.  'சதுரங்க வேட்டை'  படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார்.  

பிங்க் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை.  மேலும் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் முக்கியவேடத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது அஜித் உடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை மெய்சிலிர்க்க கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில் "அஜீத் பக்கா ஜென்டில்மேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் உட்கார்ந்திருந்தார் நான் நின்று கொண்டிருந்தேன். அதை கவனித்த அஜித் என்னை 'சிஸ்டர்' என்று அழைத்து, எழுந்து நின்று மரியாதை செய்தார். ஒரு நாற்காலி கொண்டுவரச் சொல்லி உட்கார வைத்தார். நான் உட்கார்ந்த பிறகு அவர் உட்கார்ந்தார்.

இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் ஒரு கதாநாயகன் இப்படி மரியாதை செய்யத் தேவையில்லை உண்மையிலேயே அஜித் மிக சிறந்த மனிதர் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ஆண்ட்ரியா.