கடந்த வாரம் வெளியான அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’நாளுக்கு நாள் பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுவரும் நிலையில், இதற்கு முந்தைய அவரது படமான விஸ்வாசத்தில் அவரது மகளாக நடித்த அனைகா சுரேந்திரன் இப்படம் காலத்தின் தேவை என்று ட்விட் பண்ணியிருக்கிறார்.

மலையாள நடிகையான அனைகா சுரேந்திரன் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’படத்தில் அஜீத்தின் மகளாக நடித்ததன் மூலம்தான் பெரும்புகழ் பெற்றார்.அப்பட ரிலீஸுக்குப் பின்னர் ட்விட்டர் கணக்கு துவங்கிய அவர் அஜீத் குறித்து எந்தப் பதிவுகள் போட்டாலும் அதில் அவரை அப்பா என்றே விளிக்கிறார். இந்நிலையில் மீண்டும் அனைகா தல60 படத்தில் நடிக்கிறார் என்று சில செய்திகள் கிளம்பிய நிலையில்,...தல60ல் நான் நடிக்கிறேனா என்பது குறித்து சில செய்திகளும் நிறைய கேள்விகளும் வந்துகொண்டிருக்கின்றன. இப்போதைக்கு அவையெல்லாம் வதந்திகள்தான். ஆனால் நல்லது நடக்கும் என்று காத்திருப்போம்’என்று பதிவிட்டிருக்கிறார்.

அவரது இன்னொரு பதிவில்,...நேற்று மாலைதான் நேர்கொண்ட பார்வை பார்த்தேன். பல அதிரும் வசனங்களுடன் இன்றைய சமூகத்துக்குத் தேவையான கருத்துடன் பெண்களின் பாதுகாப்புக்குக் குரல்கொடுக்கும் படமாக வந்திருக்கிறது நே.கொ.பா’.எப்போது இப்படிப்பட்ட நல்ல படங்களுடன் வருபவர் ஒன் அண்ட் ஒன்லி எங்கள் அஜீத் அப்பா’என்று எழுதியிருக்கிறார் அனைகா.