Asianet News TamilAsianet News Tamil

"மிஷனுக்காக செம ஆக்ஷன்".. பக்காவா ட்ரைனிங் எடுத்த நடிகை எமி ஜாக்சன் - வீடியோ வெளியிட்டு பாராட்டிய லைகா!

Actress Amy Jackson : சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரை உலகில் கால் பதித்துள்ளார் பிரபல நடிகை எமி ஜாக்சன். வருகின்ற பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியாகவுள்ள Mission திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

Actress Amy Jackson Training stunt sequences for Arun vijay movie mission chapter 1 ans
Author
First Published Jan 7, 2024, 6:39 PM IST

லண்டன் நாட்டு மாடல் அழகியான எமி ஜாக்சன், கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான "மதராசபட்டினம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடிக்க துவங்கினார் அவர். 

தமிழ் மொழியில் அவர் நடிப்பில் வெளியான சங்கரின் "ஐ", நடிகர் தனுஷின் "தங்க மகன்", உதயநிதியின்  "கெத்து", தளபதி விஜயின் "தெறி" மற்றும் பிரபுதேவாவின் "தேவி" போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "எந்திரன் 2.0" திரைப்படத்தில் நிலா என்கின்ற ரோபோட்டாக நடித்து பலரையும் அசத்தியிருந்தார். 

"கலைஞர் 100".. முதல் ஆளாக வந்த வைகை புயல் - மீண்டும் இணையுமா அந்த காமெடி காம்போ? பார்த்திபன் ட்வீட் வைரல்!

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்தாரோடு தனது நேரத்தை செலவிட்டு வரும் நடிகை எமி ஜாக்சன், சுமார் 6 ஆண்டுகள் கழித்து தற்பொழுது மீண்டும் திரைத்துறையில் களமிறங்குகிறார். தனது முதல் திரைப்பட இயக்குனரான விஜய் இயக்கத்தில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிக்கும் மிஷன் சாப்டர் 1என்கின்ற திரைப்படத்தில் அவர் இப்பொழுது நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாக அவர் நடித்திருக்கும் நிலையில், பல ஆக்சன் காட்சிகளிலும் அவர் தோன்றுகிறார். ஆகவே அதற்காக பிரத்தியேக பயிற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். தற்பொழுது அவரை கௌரவிக்கும் விதத்தில் அவருடைய ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

தூண்டி விட்ட ஜோதிகா.. அப்பா சிவகுமார் பேச்சை மதிக்காமல் சூர்யா செய்த விஷயம்! கடும் கோபத்தில் குடும்பத்தினர்!

Follow Us:
Download App:
  • android
  • ios