வழக்கமாக தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிப்பது என்பதே அரிதான ஒன்று. அதுவும் மம்மியான பிறகு ஹீரோவின் அண்ணி, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் நிறைய நடிகைகள் தங்களது காதல் விவகாரத்தை கூட வெளியில் தெரியாமல் மிக ரகசியமாக பாதுகாப்பார்கள். ஆனால் இதை எல்லாம் ஆரம்பம் முதலே உடைத்து வந்தவர் எமி ஜாக்சன். மதாரசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி, தனுஷ் உடன் தங்க மகன், விக்ரமின் ஐ, ரஜினியின் 2.O உள்ளிட்ட படங்களில் ஹிட் படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். 

ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி சோசியல் மீடியாவில் பரவவிட்டார். தான் கர்ப்பம் அடைந்த செய்தியையும் சகஜமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். எமியின் பிரக்னன்ஸி பெல்லி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம வைரலானது. அதன் பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, மருத்துவமனையில் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எமி வெளியிட, ரசிகர்கள் செம குஷியாகினர். 

தற்போது வரை குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்த எமி ஜாக்சன், குழந்தை வளர்ப்பு, குழந்தை பராமரிப்பு குறித்த விஷயத்தில் ஆர்வம் செலுத்தி வந்தார். தற்போது ஆண்ட்ரியாஸ் பிறந்து 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் எமி ஜாக்சன். 

அதற்காக தனது ஓவர் கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் ரெட் கலர் உடையில் முன்னழகு தெரியும் படி படுகவர்ச்சியாக எமி ஜாக்சன் கொடுத்துள்ள ஹாட் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அதேபோன்று குழந்தை பிறந்த பிறகு கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடையை பராமரித்து வருகிறார் எமி ஜாக்சன். கொஞ்சம் கூட குண்டாகாமல் ஸ்லிம்மா சிக்கென இருக்கும் எமி, விதவிதமான மார்டன் உடைகளிலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.