பிரபல நடிகை ஒருவர், தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி இருப்பவர்கள் யாரும், வாடகை தர வேண்டாம் என தாராள மனதுடன் தெரிவித்துள்ளதால், இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

கொரோனா பிரச்சனை, உலக சூழ்நிலையையே ஒட்டு மொத்தமாக மாற்றி போட்டுள்ளது. பணக்கார தொழிலதிபர்கள் முதல், கூலி தொழிலாளர்கள் வரை, பலர் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, சில தளர்வுகள் கொண்டுவரப்பட்ட போதும், கொரோனா பிரச்சனை மேலும், அதிகரித்து வருவதால் மீண்டும் சென்னை உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சனையின் காரணமாக, பலர் வேலை செய்வதற்காக  சென்னை, மும்பை, போன்ற இடங்களில் தங்கி இருந்தவர்கள், தங்களுடை சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.  அதே நேரத்தில் எங்கிருந்தாலும் அவர்கள் கொடுக்க வேண்டிய வாடகை பணத்தை வீட்டு முதலாளிகள் வாங்குவதிலும் குறியாக உள்ளனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை அமிர்தா ராவ்,  மும்பையில் இவருக்கு சொந்தமான வீடுகளில் வாடகைக்கு வசித்து வரும், சுமார் 20 திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் யாரும் வாடகை தர வேண்டாம் என கூறியுள்ளார். இவர் வீட்டில் வசித்து வரும் பலர்,  சினிமா துறையை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தன்னிடம் பணிபுரிய அனைவரையும் வேலைக்கு வேண்டாம் என அறிவுறித்தியுள்ளதோடு, அவர்களுக்கு மாதாந்திர சம்பளத்தையும் கொடுத்து வருகிறார். அதே போல் முடிந்த வரை, தன்னால் முடிந்தவரை உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.