Asianet News TamilAsianet News Tamil

சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்ட நடிகை அமலா..! இவருடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

தமிழில், இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான 'மைதிலி என்னை காதலி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா.  
 

actress amala sad life for before acting
Author
Chennai, First Published Apr 23, 2020, 3:39 PM IST

தமிழில், இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான 'மைதிலி என்னை காதலி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா.  

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்,  கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் இவர் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வந்ததாக, இவருடைய சோகமான வாழ்க்கை பற்றிய   தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

actress amala sad life for before acting

ஐரிஷ் தாய்க்கும், பெங்காலி தந்தைக்கும், மகளாக பிறந்தவர் நடிகை அமலா.  இவருடைய தந்தை ஒரு கடற்படை அதிகாரி. எனவே அடிக்கடி பல ஊர்களுக்கு மாறுதல் இருந்தது.  இதனால் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தொடர முடிவு செய்தார் அமலா.

அதன்படி சென்னையில் உள்ள ஒரு ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படித்தார். இந்நிலையில் அமலாவின் தந்தைக்கும் - தாய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அவர்களை நிரந்தரமாக பிரியச்செய்தது.  

actress amala sad life for before acting

இதனால் பொருளாதாரரீதியாக அமலா மிகவும் பாதிக்கப்பட, கல்லூரி படிப்பு செலவிற்கும், சாப்பாட்டிற்கும் கூட பணம் இல்லாமல் கஷ்டப்படும் நிலை உருவானது. பின் சில இடங்களில் வேலை செய்து கொண்டே, நடனம் மீது கவனம் செலுத்தினார். நடன நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தன்னுடைய செலவுகளை பார்த்து கொண்டார்.

பின் இவருடைய அழகும், நடன திறமையும் இவருக்கு 'மைதிலி என்னை காதலி' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இந்த படம் விமர்சனம் ரீதியாகவும், அமலாவுக்கு முதல் படத்திலேயே நல்ல நடிகை என்கிற பெயரை பெற்று தந்தது.

actress amala sad life for before acting

இதை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமான அதே  வருடத்திலேயே...  மெல்ல திறந்த கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, உன்னை ஒன்று கேட்பேன், ஒரு இனிய உதயம்,  ஐந்து படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தார். 

தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்  ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார். 

முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1992 ஆம் ஆண்டு  பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்த இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அகில் என்கிற மகன் உள்ளார்.

actress amala sad life for before acting

மேலும் நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் மகனான நாக சைதன்யாவையும் எவ்வித பாகுபாடுமின்றி அவர் மீதும் பாசம் காட்டி வருகிறார். நடிப்பின் மீது இவருக்கு இருந்த தீராத ஆர்வம் தான் இவரை முன்னணி நடிகையாகவும் மாற்றியது என்றாலும், இவருடைய திறமையை  நிரூபிக்க வாய்ப்பு கொடுத்த நடிகர் டி.ராஜேந்தரை ஒரு போதும் மறக்க மாட்டேன் என பல பேட்டிகளில் மனமார அவருக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார் அமலா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios