நமது ஏசியநெட் இணையதளத்தில் மூன்று தினங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்த அமலா பால் குறித்த செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அவரே இன்று தனது பக்கத்தில் இரு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரோகாந்த் இயக்க்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ஹீரோயினாக அமலா பால் கமிட் பண்ணப்பட்டிருந்தார். அப்படத்தின் ஊட்டி ஷெட்யூலில் அமலா பால் கலந்துகொள்ளவிருந்த நிலையில் திடீரென அமலா படத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார். அதற்கு ‘ஆடை’படத்தில் அவர் நடித்திருந்த நிர்வாணக்காட்சிகள்தான் காரணம் என்ற நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் அமலாபாலின் கால்ஷீட் இல்லாதததால் அவர் தானாகவே படத்தை விட்டு வெளியேறியதாக செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள அமலா பால்,’ தமிழ் சினிமாவில் இன்னும் பல பழமைவாதிகள் நடமாடி வருகின்றனர். ‘ஆடை’ படத்தில் துணிச்சலாக நான் நடித்ததை ஜீரணிக்க முடியாமலேயே என்னை விஜய் சேதுபதி படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள். அதை அவர்கள் முன்கூட்டியே தெரிவிக்காததால் அவர்கள் படத்துக்கு காஷ்ட்யூம்கள் எடுப்பதற்காக மும்பை வந்திருக்கிறேன்.

என்னை நீக்கியதற்கு கம்பெனியின் நடைமுறைகள் என் எதிர்பார்ப்புக்கு ஒத்து வரவில்லை என்று சால்ஜாப்பு சொல்லியிருக்கிறார்கள். நான் படத்தயாரிப்பு நிறுவனங்களுடம் முரண்படாமல் அவ்வளவு அட்ஜஸ்ட் செய்துகொண்டு நடிப்பவள் என்று என்னை வைத்துப் படம் எடுப்பவர்களுக்குத் தெரியும். எனவே பொய்யான செய்திகளைப் பரப்புவதை அவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்’என்றும் அந்த அறிக்கையில் அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.