தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக படத்துக்கு ஆறுகோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நயன்தாராவை விடவும் ஹாட் டாபிக் ஆகிவிட்டார் அமலா பால், ‘ஆடை’ படத்தில் முழு நிர்வாணக்காட்சியில் நடித்ததன் மூலம். நேற்று முன் தினம் வெளியான இப்படத்தின் டீஸர் இரண்டே தினங்களில் 4 மில்லியன் பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறது.

ஊடகங்களில் அமலா பாலின் ஆடையில்லாத ‘ஆடை’ டீஸர் ரிலீஸான பிறகு அவர் ஆடையில்லாமல் எத்தனை நாட்கள் நடித்தார். எந்த லொகேஷனில் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர். படம் சென்சாருக்குப் போனபோது எவ்வளவு நீளத்துக்கு ஆடையில்லாமல் இருந்தார். அதில் எவ்வளவு வெட்டப்பட்டது ????என்று ஏகப்பட்ட விபரங்கள் வரிசையாக வந்துகொண்டேயிருக்கின்றன.

இவை அத்தனையையும் தனது கள்ளச்சிரிப்புடன் விசில் அடித்து ரசித்துக்கொண்டிருக்கிறார் இந்த அளவுக்கு பரபரப்பை எதிர்பார்த்த அமலா பால். ஏனெனில் பரபரப்பு சினிமாவில் அவருக்கு முதல் அனுபவமல்ல. இதற்கு முன்பே சர்ச்சை சாமியின் இயக்கத்தில் மாமனாரிடம் காமவெறி கொண்ட மருமகளாக இவர் நடித்த ‘சிந்து சமவெளி’ ஆடை படத்தை விடவும் அதிக சர்ச்சைகளை சந்தித்தது. அப்படம் வெளியிடப்பட்ட பல தியேட்டர்களில் திரையில் அமலா பால் தோன்ற ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் செருப்பை வீசி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழக மக்கள் ஓரளவுக்கு மேல் கவர்ச்சியை அனுமதிக்காதவர்கள் என்று தெரிந்தும் அமலா பால் ‘துணிந்து’ நிர்வாணமாக நடித்திருப்பது அதே பரபரப்பை எதிர்பார்த்துதான். எனவே தமிழக தாய்க் குலங்கள் ஆடை படத்துக்கு சிந்து சமவெளிக்குக் காட்டிய அதே செருப்பையும் வெறுப்பையும் காட்டுவார்களா? சில நாட்கள் காத்திருப்போம்.