இந்நிலையில் குட்டி டவுசரும், டாப்பையும் போட்டுக்கொண்டு பீச்சில் தலைகீழாக யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விஜய்யின் தலைவா படத்தில் நடித்து கொண்டிருந்த போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என விஜய் கூறியதாகவும், அதை முதலில் ஏற்றுக்கொண்ட அமலா பால் பின்னர் படங்களில் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் பின்னர் ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். 

இதனிடையே மும்பையைச் சேர்ந்த பாடகரான பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த புகைப்படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நொடியில் இருந்தே சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது. 

இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!

இதையடுத்து அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறுதலாக சோசியல் மீடியாவில் வைரலானதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை போட்டு இளசுகளை காந்தம் போல் ஈர்த்துவருகிறார். இந்நிலையில் குட்டி டவுசரும், டாப்பையும் போட்டுக்கொண்டு பீச்சில் தலைகீழாக யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமலா பாலின் இந்த சாகச போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.