'ஆடை' படத்துக்கு கிடைத்த சிறப்பான விமர்சனங்களுக்கு பிறகு அமலா பால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ரத்னகுமார் இயக்கத்தில் பொதுமக்களிடம் பிரான்க் செய்யக் கூடாது என்ற நல்ல கருத்தை உள்ளடக்கி வெளியான இந்த படம் விமர்சகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆடையின்றி அமலா பால் நடித்ததை இந்தியளவில் பல சினிமா பிரபலங்களும் வாய் பிளந்து பாராட்டினர். 

இதையடுத்து ஆடை படத்தில் நடித்த அமலா பால், நெட்பிளிக்ஸில் தெலுங்கில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரிஸ் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படி ஒரு முக்கியத்துவமான கதையில் அமலா பால் நடித்துள்ள "அதோ அந்த பறவை போல" படத்தில் நடித்துள்ளார். அமலாவுடன் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கொச்சார் நடிப்பில் வினோத் கே.ஆர். இயக்கியுள்ளார்.  

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ள அமலா பால். அதற்காக கிரவ் மகா என்ற தற்காப்பு கலையையும் 3 மாசமாக முறையாக பயின்றுள்ளார். 

அதுமட்டுமில்லாமல் 60 அடி உயரத்தில் இருந்து குதிக்கிறது, மரத்து மேல வேகமாக ஏறுவது என ஒரு ஹீரோவுக்கு இணையா என்னலாம் பண்ணனுமோ, அதைலாம் பண்ணியிருக்காங்க அமலா பால். அமலா பாலின் நடிப்பில் "ஆடை" படத்துக்கு பிறகு இந்த படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது.