பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். தனது சோசியல் மீடியா பக்கங்களில் குவிந்த ஆபாச கமெண்ட்களால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கமெண்ட் செக்‌ஷனை ஆப் செய்யும் அளவிற்கு நெருக்கடியில் உள்ளனர். தற்போது சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நெபோடிசம் பிரச்சனையால் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமானோரை இழந்துள்ள ஆலியா பட், தற்போது தனது புது பட அறிவிப்பை கூட நெட்டிசன்களுக்கு பயந்து வேற லெவலுக்கு செய்துள்ளார். ஆலியா பட் நடித்துள்ள Sadak 2 திரைப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆனால் இதைப் பற்றி நெட்டிசன்கள் கழுவி ஊற்றக்கூடாது என்பதற்காக தனது கமெண்ட்டை ஆப் செய்துள்ளார். 

 தந்தை மகேஷ் பட் இயக்கத்தில் மகள் ஆலியா பட் நடித்துள்ள வரும் ஆகஸ்ட் 28ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. இதில், ஆலியாவுக்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளார். என்ன தான் கமெண்ட் செக்‌ஷனை ஆலியா லாக் செய்து வைத்தாலும், விதவிதமான மீம்ஸ் மற்றும் ட்ரால் போஸ்ட்களை உருவாக்கி நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்து வருகின்றனர்.