குடும்பத்தோடு திருச்செந்தூரில் சுவாமி தரிசனம்.. கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரல் வீடியோ!
பிஸியான சூழலுக்கு நடுவே தனது குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை 6, இவை அனைத்துமே தமிழ் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீதமுள்ள இந்த ஆறு மாத காலத்தில் இவருடைய நடிப்பில் மேலும் 7 திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
விக்ரமுடன் துருவ நட்சத்திரம், விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ், மற்றும் தீயவர் குலை நடுங்க என்ற ஒரு தமிழ் திரைப்படத்தில் அவர் நடித்து வருகின்றார். மேலும் சீனு ராமசாமியின் "இடம் பொருள் ஏவல்" திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது, அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
மேலும் மூன்று மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்த வருகிறார், ஆக மொத்தம் இந்த ஓர் ஆண்டில் இவருடைய நடிப்பில் 13 திரைப்படங்கள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி மிக மிக பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த பிஸியான சூழலுக்கு நடுவே தனது குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
தற்பொழுது அந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது, ஆரம்ப காலங்களில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த அவர், 2012ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "அட்டகத்தி" என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றார். அதன் பிறகு 2015ம் ஆண்டு வெளியான "காக்கா முட்டை" திரைப்படம் அவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்.
அன்று முதல் இன்று வரை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் இவர் சிறப்பாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : வடிவேலுவுக்கு உதயநிதி கொடுத்த Surprise.. வைரலாகும் போட்டோஸ்.!