மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர்கள், இருவரும் இதுவரை இணைந்து நடித்திருந்த, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ரம்மி’ மற்றும் ’தர்மதுரை’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதோடு. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. 

மேலும் இருவர் நடிப்பிலும் உருவாகியுள்ள, ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் அணைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. எனவே கொரோனா பிரச்சனை முடிவிற்கு வந்ததும், இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம். 

தமிழை தாண்டி, தெலுங்கு, மலையாமல் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கி விட்ட, ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வானம் கொட்டட்டும், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவரின் கை வசம் அரை டஜன் படங்கள் இருந்த போதிலும் தற்போது படங்கள் வெளியிட முடியாத சூழல் உள்ளது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டது.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி உள்ள இந்த படத்தை, விக்னேஷ் கார்த்திக் இயக்க, சதீஷ் என்பவர் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும், படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. 'திட்டம் இரண்டு' பிளான் பி என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்த கரை போலீஸ் பைல், துப்பாக்கி, ஊசி போன்ற்வை இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்  இடம் பெற்றுள்ளது.