actress aalya manasa intresting love

ராஜா ராணி சீரியலில் 'செம்பா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் மிகவும் அப்பாவிப் பெண்ணாக நடிக்கும் இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர் .

சென்னை சௌகார் பேட்டையில், பிறந்து வளர்ந்த இவர் சிறந்த நடனக்கலைஞர். முதலில் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபல தொலைகாட்சியில் அறிமுகம் ஆகி, தற்போது நடிப்பிலும் கலக்கி வருகிறார்.

இவர் தன்னுடன் பணியாற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை துரத்தி துரத்தி காதலித்துள்ளார். இந்த அனுபவத்தை சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் கூறுகையில். 

நான் ஒருவரை துரத்தி.. துரத்தி சென்று ஐ லவ் யு சொல்லியும் கூட அவர் கொஞ்சம் கூட என்னை கண்டுகொள்ளவே இல்லை. பின் அவர் தன்னிடம் வந்து 'மார்டன் ஏஜ்' பொண்ணுகளை நம்ப முடியாது என கூறிவிட்டார். பின் எப்படியோ அவருக்கு என் காதலை கஷ்டப்பட்டு புரிய வைத்து காதலிக்க வைத்துவிட்டேன் எனக் கூறினார்.

இவருடைய காதலன் ஆல்யா பற்றி குறிப்பிட்டது, இவரை இம்பிரஸ் பண்ண 20 ருபாய் செலவு செய்து, தாஹி பூரி வாங்கி கொடுத்தா போதும், உடனே இம்பிரஸ் ஆகிடுவாங்களாம்.