மிகப்பெரிய பட்ஜெட், விஷால் - ஆர்யா மீண்டும் ஒன்றிணைவது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை 3, எனிமி ஆகிய படங்களின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தன்னுடைய உயிர் நண்பரான விஷாலுடன் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

மிகப்பெரிய பட்ஜெட், விஷால் - ஆர்யா மீண்டும் ஒன்றிணைவது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எனிமி படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து விஷால் மற்றும் ஆர்யா ரசிகர்கள் இன்றிலிருந்தே சோசியல் மீடியாவில் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர்.