கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" வரலாற்று நாவலை தமிழ், இந்தி,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்க எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த சமயத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பார்த்திபன் மற்றும் கீர்த்தி சுரேஷ் விலகியதாக கூறப்படுகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்தப் படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுத உள்ளார். சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளதாகவும், அங்கு 100 நாட்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மணிரத்னம் தாய்லாந்து சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. கடந்த மாதம் தொடங்கி இருக்க வேண்டிய ஷூட்டிங் தொடர்ந்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் பொன்னியின் செல்வன் படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கான பூஜை போட உள்ளதாகவும், நாளை முதலே படப்பிடிப்பு பணிகளும் தீயாய் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.