மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தலைவி என்ற படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத்தும், சசிகலா வேடத்தில் ப்ரியா மணியும், எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமியும், அவரது மனைவி ஜானகி வேடத்தில் மதுபாலாவும் நடிக்க உள்ளனர். தற்போது கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!

இந்நிலையில் படம் குறித்து சூப்பர் தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது ஜெயலலிதாவும், அரசியல் கட்சி தலைவர் மற்றும் நடிகருமான என்.டி.ஆரும் நல்ல நண்பர்களாம். அவர்களது நட்பை அப்படியே திரையில் காட்ட விரும்பிய ஏ.எல்.விஜய், என்.டி.ஆர். குடும்பத்தைச் சேர்ந்த யாராவது அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார். 

அதனால் முதலில் ஜூனியர் என்.டி.ஆரை அணுகிய ஏ.எல்.விஜய் தங்களது தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தாத்தா என்.டி.ஆர். கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்திருந்த ஜூனியர் என்.டி.ஆர்., ஏ.எல்.விஜய்யின் கோரிக்கையை நிராகரித்துவிட்டாராம். 

இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!

இதையடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க கேட்டுள்ளார். அவரும் திரும்ப, திரும்ப அப்பா கேரக்டரில் நடிப்பது நன்றாக இருக்காது என்று கூறி மறுத்துவிட்டாராம். மகனும் மாட்டேன்னுட்டாரு, பேரனும் முடியாதுன்னுட்டாரு, இப்ப யார நடிக்க வைக்கலாம் என்ற தீவிர யோசனையில் உள்ளாராம் ஏ.எல்.விஜய்.