Actors Association 30th anniversary tribute for mgr
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 30ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர் கருணாஸ், செயற்குழு மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் நடிகர் சங்க உறுபினர்கள் ராஜேஷ், ஜூனியர் பாலையா, A.L.உதயா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், மனோ பாலா, லலிதா குமாரி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
புகைப்படங்கள்:






