Asianet News TamilAsianet News Tamil

‘மாரி 2’ மண்ணைக் கவ்வணும்... தனுஷுக்கு பில்லி, சூனியம் வைக்கத்தயாராகும் நடிகர்கள்...


இக்கூட்டத்தில் தனது மாமனாரின் செல்வாக்கால் மொத்தத்தில் பாதி, அதாவது சுமார் 500 தியேட்டர்கள் வரை ஆக்கிரமித்து ரிலீஸாகிறது தனுஷின் ‘மாரி 2’.இவரை எதிர்த்து தியேட்டர்கள் பெறும் முயற்சியில் சிவகார்த்திகேயன்,ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், டப்பிங் படம் ரிலீஸ் பண்னும் விஷால் உட்பட யாருமே வெல்ல முடியவில்லை.

actors aggressive against dhanush
Author
Chennai, First Published Dec 15, 2018, 11:20 AM IST


தமிழ் சினிமாவின் சாபக்கேடான நாளான டிசம்பர் 21 அன்று இறுதியாக ஒரே நாளில் ஆறு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் மிக குறைந்த தியேட்டர்களோடு களம் இறங்கும் படம், முதன் முதலில் ரிலீஸை அறிவித்த ‘சீதக்காதி’.actors aggressive against dhanush

‘எத்தனை பேர் வேணும்னாலும் படத்தை ஒரே தேதியில் ரிலீஸ் பண்ணி எக்கேடும் கெட்டுப்போங்க என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அரையிறுதி தேர்வு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நான் நீ என்று பெரும்போட்டி நிலவியது. தற்போது இறுதியாக ‘கனா’ ‘அடங்க மறு’, மாரி 2’, சிலுக்குவார்பட்டி சிங்கம்’, கே.ஜி. எஃப்’, சீதக்காதி’ ஆகிய படங்கள் பெரும்போராட்டத்துக்கு மத்தியில் ஆளுக்குக் கொஞ்சமாக தியேட்டர்கள் பெற்று ரிலீஸாகின்றன.

இக்கூட்டத்தில் தனது மாமனாரின் செல்வாக்கால் மொத்தத்தில் பாதி, அதாவது சுமார் 500 தியேட்டர்கள் வரை ஆக்கிரமித்து ரிலீஸாகிறது தனுஷின் ‘மாரி 2’.இவரை எதிர்த்து தியேட்டர்கள் பெறும் முயற்சியில் சிவகார்த்திகேயன்,ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், டப்பிங் படம் ரிலீஸ் பண்னும் விஷால் உட்பட யாருமே வெல்ல முடியவில்லை.actors aggressive against dhanush

இதை ஒட்டி தனுஷுக்கு எதிராக தற்காலிக கூட்டணி அமைத்திருக்கும் மேற்படி நடிகர்கள் இதற்காகவே வாட்ஸ் அப்பில் ஒரு தனி குரூ அமைக்காத குறையாக ‘மாரி2’ எப்படியாவது மண்ணைக் கவ்வணும். அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. கேரளாவிலருந்து மாந்திரீகர்களைக் கூப்பிட்டு வந்து பில்லி, சூன்யம் வைச்சாவது அந்த ஒல்லிப்பிச்சானை ஒழிச்சிக் கட்டணும்’ என்று பேசிவருகிறார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios