தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் யோகிபாபுவிற்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவியது. 

சாதாரண குடும்பத்தை சேர்ந்த பார்கவி என்கிற பெண்ணை யோகி பாபுவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், திருமண வேலைகள் தற்போது அவருடைய வீட்டில் களைகட்டி வருவதாகவும் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வைரலாக பரவியது.  

இதை அடுத்து திடீரென யோகி பாபு, பார்கவியை வேண்டாம் எனக் கூறி விட்டதாகவும், அதற்கு பதில் மஞ்சு என்கிற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இப்படி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்  யோகிபாபு திருமணம் குறித்த உண்மையை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,  திருநெல்வேலியில் நடைபெற்று வரும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது பிஸியாக இருப்பதாகவும், தன்னுடைய திருமணம் குறித்து வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய் வதந்தி என்றும் கூறியுள்ளார். மேலும் விரைவில் திருமணம் குறித்து தானே அறிவிப்பேன் என்றும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் யோகி பாபு.