தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் யோகிபாபு. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடிய பிறகு யோகிபாபுவிற்கு அடித்தது யோகம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல, தளபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் கதிருடன் ஜடா, சிவகார்த்திகேயன் உடன் ஹீரோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். எதிரே நிற்பது எப்படிப்பட்ட முன்னணி நடிகராக இருந்தாலும் சரி, கவுண்டர் டயலாக்கால் அதிரவைக்கும் யோகிபாபுவையே ஒரு வதந்தி அதிர வைத்துள்ளது. 

இதையும் படிங்க: சிரஞ்சீவி வீட்டில் கூடிய 80’ஸ் கிட்ஸ்... செம்ம வைரலாகும் ரீயூனியன் போட்டோஸ்...!

நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் நடந்துவிட்டதாகவும், அவரது வாழ்க்கை துணைவி இதுதான் என்பது போன்ற புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எனக்கு தெரியாமா எப்ப, எனக்கு கல்யாணம் ஆச்சின்னு பதறிப்போன யோகிபாபு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், எனக்கு கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன் என வதந்தி பரப்பும் நெட்டிசன்களுக்கு அதிரடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.