தமிழ் திரையுலகில் தனக்கென தனி நகைச்சுவை பாணியுடன் சிறப்பான இடத்தை பிடித்திருப்பவர் பத்ம ஸ்ரீ விவேக். காமெடியில் கூட கொஞ்சம் சீரியஸ் இருக்கனும், நாட்டு மக்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்பதற்காக பயனுள்ள கருத்துக்களை பரப்பக்கூடியவர். அதனால் தான் அவரை தமிழ் ரசிகர்கள் சின்ன கலைவாணர் என கொண்டாடி வருகின்றனர். 

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் விவேக் மனதில் பட்டதை பளீச்சென பேசக்கூடியவர். நாட்டின் சமூக சூழலுக்கு ஏற்றது போல் தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் பதிவிடும் சில கருத்துக்கள் பிரச்சனையை கிளப்பியுள்ளது. பொத்தம் பொதுவாக எதையாவது சொல்லி வைப்போமே என விவேக் போட்ட ட்வீட் ஒன்று பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.

இதையும் படிங்க: சாய்பல்லவி தங்கச்சியா இது..? சகோதரிகள் செய்யுற அட்ராசிட்டியை பாருங்க...!

அதில், எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள். 1. யார் பற்றியும் அவதூறு பேசாதே - திரு.        ரஜினிகாந்த்.... 2.ignore negativity- திரு. விஜய்...3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்... என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை பார்த்த கமல் ரசிகர் ஒருவர் கோபம் பொங்கி எழுந்து, ஏன் கமல் சார் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லையா மிஸ்டர் போலி பகுத்தறிவாதியே என கமெண்ட் செய்துள்ளார். 

அதற்கு மற்ற ட்விட்டர் பிரபலங்களை போல் அசிங்கமாக திட்டுவது, ஊரை கூட்டி ஒப்பாரி வைப்பது என்று இல்லாமல். சூப்பராக நச்சென பதிலளித்துள்ளார் விவேக். அது என்னவென்றால்.... “நீங்கள் என்னை பற்றி சொன்னதை கமல் சாரிடம் சொல்லுங்கள். அவரே உங்களை திருத்துவார். எங்கள் நட்பு முட்டாள்களுக்கு புரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.