தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நகைச்சுவை நடிகர் விவேக் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். 

கடந்த 5 தினங்களுக்கு முன்பு தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரை  லண்டனில் இருந்து தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்து திமுக தலைவர் முக. ஸ்டாலின் முதல் அத்தனை அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர். அரசியலில் கட்சி பாகுபாடின்றி அவருக்குக் கிடைத்த வாழ்த்து திரையுலகிலிருந்து கிடைக்கவில்லை.

இந்நிலையில் சற்று தாமதம்தான் எனினும் தனது அலுவலகத்திலிருந்து இரண்டு தெருக்கள் மட்டுமே தள்ளி அமைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்துக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்த நடிகர் விவேக் அவருக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். திரையுலகத்தினரில் பெரும்பாலானோர் தன்னைக் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில் தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த விவேக்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி சொன்ன தமிழிசை,...Dr Tamilisai Soundararajan @DrTamilisaiGuv..சகோதரர் திரு.விவேக் அவர்கள் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்...வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரர் திரு. விவேக் அவர்களுக்கு எனது நன்றிகள்...என்று பதிவிட்டுள்ளார்.