தமிழ் திரையுலகில் தனக்கென தனி நகைச்சுவை பாணியுடன் சிறப்பான இடத்தை பிடித்திருப்பவர் பத்ம ஸ்ரீ விவேக். காமெடியில் கூட கொஞ்சம் சீரியஸ் இருக்கனும், நாட்டு மக்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்பதற்காக பயனுள்ள கருத்துக்களை பரப்பக்கூடியவர். அதனால் தான் அவரை தமிழ் ரசிகர்கள் சின்ன கலைவாணர் என கொண்டாடி வருகின்றனர். 

சமீப காலமாக இவர், தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டு, டாக்டர் அப்துல் கலாம் கூறியபடி, அதிகப்படியான மர கன்றுகளை நட்டு வருவதை தவறாமல் செய்து வருகிறார்.அந்த வகையில் இது வரை 10 லட்சத்திற்கும் அதிகமான  மர கன்றுகளை விவேக் நட்டுள்ளார். மேலும் முடிந்த வரை பல சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருக்கும் விவேக். சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை பதிவிட்டுவருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் உச்சகட்ட அச்சத்தில் இருக்கும் இந்த சமயத்திலும், ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்களை அக்கப்போரு ஓய்ந்தபாடியில்லை. இதுவரை நெட்டிசன்களை மட்டுமே கடுப்பாக்கி வந்த தல, தளபதி ரசிகர்கள் பார்த்த தேவையில்லாத வேலை தற்போது நடிகர் விவேக்கை செம்ம காண்டாக்கிவிட்டது. 

தனக்கு பிடிக்காத நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் குறித்து சோசியல் மீடியாவில் தரக்குறைவாக  பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இதில் சம்பந்தமே இல்லாத நபர்களை டேக் செய்து கோர்த்துவிடுவது தான் அநாகரிகத்தின் உச்சம். அப்படி அஜித், விஜய் குறித்த கொச்சையான பதிவுகளுக்கு விவேக்கை டேக் செய்து தொல்லை கொடுத்து வந்த நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை tag செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் block ஆகும்.நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன். Stay home stay safe!... சூழலை புரிந்துகொள்ளாமல் வேண்டாத வேலை பார்க்கும் இவர்கள் இனியாவது திருந்துவார்களா? பார்க்கலாம்...!